Study buddhism what is buddhism

இயற்கையின் உண்மையான எதார்த்தத்தை புரிந்து கொண்டு முழு மனித ஆற்றலையும் பெருக்க உதவும் வழிமுறைகளின் தொகுப்பே பௌத்தமாகும்.

இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் என்று அனைவராலும் அறியப்படும் சித்தார்த்த கௌதமரால் பௌத்தம் நிறுவப்பட்டது. பௌத்தம் ஆசியக் கண்டம் முழுவதும் பரவி தற்போது உலகின் நான்காவது பெரிய மதமாக இருக்கிறது. புத்தரின் பெரும்பாலான போதனைகள் அனைத்தும் விழித்தெழுவதற்காக அவர் சுயமாக உணர்ந்தவை, இதனால் மற்றவர்களும் தங்களுக்குள் இருக்கும் அறிவொளி புத்தராக மாறலாம். மக்கள் தங்களின் முக்கியத்துவங்கள், விருப்பங்கள் மற்றும் திறமைகளில் வேறுபட்டிருக்கலாம், புத்தராக மாறுவதற்கான திறன் என்பது ஒவ்வொருக்கும் சமமானது என்பதை அவர் கண்டார். இதற்கு மதிப்பளிக்கும் விதமாக, ஒவ்வொருவரின் வரையறைகளை கடைந்து வரவும், முழுத் திறனை உணரவும் அவர் எண்ணற்ற வழிமுறைகளை போதித்தார்.

ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கேட்ப பெளத்தம் பலவிதங்களில் அலுத்தங்களை சந்திக்கிறது, அதனால், பெளத்தம் பல்வேறு வடிவங்களில் உருவெடுக்கலாம், ஆனால், அனைத்திற்கும் அடிப்படை போதனை ஒன்றுதான்.

அடிப்படை பௌத்த போதனைகள் – நான்கு உன்னதமான உண்மைகள்

புத்தரின் அடிப்படை போதனைகள் நான்கு உன்னதமான உண்மைகள் எனப்படுகின்றன, அந்த நான்கு உண்மைகளும் நிதர்சனமானவை என்று உயர்ந்தவர்களால் உணர்ந்து கண்டறியப்பட்டுள்ளன :

முதல் உன்னதமான உண்மை : நிஜமான பிரச்னைகள்

வாழ்வில் எவ்வளவோ சந்தோஷங்கள் இருந்தாலும், சிறு பூச்சியில் இருந்து, வீடில்லாதவர், கோடீஸ்வரர் என ஒவ்வொருவருமே பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில், நமக்கு வயோதிகம், உடல் நலக்குறைவு, நமக்கு பிரியமானவர்களின் இறப்பால் வெறுப்பு மற்றும் விரக்தியடைகிறோம். நாம் விரும்புவது கிடைப்பதில்லை அல்லது நாம் விரும்பாததைப் பெறுகிறோம்.

இரண்டாவது உன்னதமான உண்மை : பிரச்னைகளுக்கான சரியான காரணம்

சிக்கலான காரணிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றிலிருந்தே பிரச்னைகள் எழுகின்றன. ஆனால் புத்தரோ, எதார்த்தம் பற்றிய அறியாமையே இறுதியான காரணம் என்கிறார்: வாழ சாத்தியமற்ற வழிகள் குறித்து நமது மனம், நமக்குள்ளும், ஒவ்வொருவருக்குள்ளும், எல்லாவற்றிலும் எடுத்தியம்புவதும் காரணம்.

மூன்றாவது உன்னதமான உண்மை: பிரச்னைகளை உண்மையில் முடிவுக்கு கொண்டுவருதல்

நம்முடைய அறியாமை என்னும் உண்மையான காரணத்தை அழித்தால் எல்லாப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதோடு எப்போதும் அந்தப் பிரச்னையை திரும்பவும் அனுபவிக்க வேண்டாம் என்பதை புத்தர் கண்டார்.

நான்காவது உன்னதமான உண்மை : மனதின் சரியான பாதை

எதார்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு அறியாமையை அகற்றினால் பிரச்னைகள் நின்று போகும். ஒவ்வொருவரும் ஒன்றோடொன்று இணைந்தவர்கள், சார்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் நாம் இதனைச் செய்ய முடியும். இதன் அடிப்படையில் அனைவருக்கும் சமமான அன்பு மற்றும் இரக்கத்தை வளர்த்தெடுக்க முடியும். நாமும் மற்றவர்களும் எப்படி வாழ்கிறோம் என்ற ஒப்பீட்டுக் குழப்பத்தை அகற்றினால் நாமும் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் செயல்பட முடியும். 

புத்தர் போதனைகளின் வகைகள்

தலாய்லாமா பௌத்தம் பற்றி மூன்று விதமான விளக்கங்களை உருவாக்கி இருக்கிறார்:

  • பௌத்த அறிவியலின் மனம் – அகநிலை அனுபவத்தின் பார்வையில் இருந்து கருத்து, சிந்தனை மற்றும் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன
  • பௌத்த தத்துவம் – நன்னெறிகள், தர்க்கம் மற்றும் பௌத்தத்தின் யதார்த்தம் பற்றிய புரிதல்
  • பௌத்த மதம் – கடந்த மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை, கர்மா, சடங்குகள் மற்றும் பிரார்த்தனை.

பௌத்த விஞ்ஞானம் நவீன நரம்பியல் அறிவியலின் இணைப்பு, ஏனெனில் அவை மனதின் பல்வேறு அறிவாற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கிய பார்வை, செறிவு, கவனம், மனநிறைவு, நியாபகம் மற்றும் நமது நேர்மறை, எதிர்மறை உணர்வுகள் பற்றிய விரிவான வரைபடத்தைத் தருகிறது. நேர்மறையான நரம்பியல் பாதைகளை வகுப்பதன் மூலம் நமது மனதின் நன்மை, திறன்களை மேம்படுத்தலாம்.   

பௌத்த சிந்தனைகள் நம்பிக்கையை விட விசாரணைகளையே அதிகம் சார்ந்திருக்கிறது, எனவே விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பௌத்த சிந்தனைகளுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கின்றன.   – 14வது தலாய் லாமா

உடல் அளவில், பௌத்த விஞ்ஞானம் அதிநவீன மருத்துவ முறைகளை உள்ளடக்கியது அதாவது எண்ணிலடங்கா நோய்களுக்கான சிகிச்சைகளையும் சேர்த்தது. வெளித்தோற்றத்திற்கு அவை காரியம் மற்றம் சக்தி பற்றிய விரிவான ஆய்வைத் தருகிறது, இதற்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. மேலும் இவை அண்டத்தின் தோற்றம், தற்போதைய வாழ்க்கை மற்றும் முடிவையும் பற்றி விவாதிக்கிறது. அதிலிருந்து சிறு நதியாக தொடர்ந்து, இன்னும் தொடங்காதவற்றையும் அறிவிக்கிறது.

பௌத்த தத்துவம் கூட்டுச்சார்பு, சார்புடைமை, தொடர்பு ஆகிய விசயங்களைக் கையாள்கிறது. தர்க்கத்திற்கான விரிவான திட்டத்தை கணக்கோட்பாடு மற்றும் விவாதத்தின் அடிப்படையில் வழங்குகிறது, அது நமது மனதின் தவறான கற்பனைகளை உணர்ந்து கொள்ள உதவுகிறது.  

பௌத்த நன்னெறிகள் நமக்கும், பிறருக்கும் எது நல்லது எது தீமையானது என்பதை வேறுபடுத்திக்காட்டும் அடிப்படையிலானது. 

நாம் நாத்திகர்களோ அல்லது ஆத்திகர்களோ, கடவுள் அல்லது கர்மா மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையோ, ஒவ்வொருவரும் தார்மீக நெறிமுறைகளை கடைபிடிக்க  வேண்டும். – 14வது தலாய் லாமா

அடிப்படை மனிதப்பண்புகளான கருணை, நேர்மை, பெருந்தன்மை மற்றும் பொறுமையை போற்றவும், மேம்படுத்தவும் முடிந்தவரை கடினனமாக முயற்சிக்க வேண்டும், அதே சமயம் பிறருக்கு தீங்க ஏற்படுத்தக் கூடாது.

பௌத்த மதம் கர்மா, கடந்த மற்றும் எதிர்கால வாழ்க்கை, மறுபிறப்பிற்கான வழிமுறை, மறுபிறப்பில் இருந்து விடுதலை மற்றம் ஞான நிலையை அடைதல் உள்ளிட்ட தலைப்புகளைக் கையாள்கிறது. ஜெபித்தல், தியானம், பிரார்த்தனை உள்ளிட்ட பயிற்சிகளையும் இது உள்ளடக்கியது. ஒவ்வொரு மதத்திற்கும் தங்களது பாரம்பரியத்திற்கு ஏற்ப அதன் அடிப்படை போதனைகளைக் கொண்ட நூல் உள்ளது. பௌத்தத்தில் ‘பௌத்த பைபிள்’ போன்ற எந்த புனித நூலும் கிடையாது.

மக்கள் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானால் பிரார்த்தனை செய்யலாம், எனினும் பலர் கோவில்களிலோ அல்லது தங்களது வீடுகளில் இருக்கும் சிலைகளின் முன்போ பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை என்பது நமக்கான வரங்களைப் பெறுவதற்காக அல்ல, மாறாக நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த உறுதி, இரக்கம் மற்றும் ஞானத்தைத் தட்டி எழுப்புவதாகும்

உணவுக்கட்டுப்பாடுகள் என்று எதுவும் இல்லை, ஆனால் பெரும்பாலான குருமார்கள் தங்களது மாணவர்களை முடிந்தவரை சைவ உணவை உட்கொள்ளச் சொல்வார்கள், புத்தரும் கூட தன்னைப் பின்பற்றுபவர்கள் மது அருந்தவோ போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளவோ கூடாது என்று அறிவுறுத்தினார். பௌத்த பயிற்சியானது மனநிறைவு, சுய ஒழுக்கத்தை மையப்படுத்துகிறது, பொதுவாக மது அருந்தினாலோ பிற போதை பழக்கம் இருந்தாலோ நாம் நமது நிலையை இழப்போம்.

பௌத்தத்தில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கென துறைவி மடப் பாரம்பரிய இருக்கிறது, அவர்களுக்கு பிரம்மச்சரியம் உள்பட நூற்றுக்கணக்கான சபதங்கள் இருக்கின்றன. அவர்கள் தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டு, துறவற சமூகத்தினரோடு வாழ்கின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை கல்வி, தியானம், பிரார்த்தனை மற்றும் தாங்கள் ஏற்றுக்கொண்ட சமூகத்திற்கான சடங்குகளைச் செய்வதற்கும் அர்ப்பணித்துக் கொள்கின்றனர். அண்மைக்காலங்களாக பல மக்கள் பௌத்தத்தை படித்தும், பௌத்த மையங்களில் தியானத்தை பயிற்சித்தும் வருகின்றனர்.  

பௌத்தம் எல்லோருக்குமானது

நம்மைப் போன்ற மனிதர்கள், எப்படி வாழ்கிறோம், நம்முடைய குறைபாடுகளை எப்படி கடந்து நம்முடைய முழுத்திறனை உணர்கிறோம் என்பதை புத்தர் கண்டறிந்தார்; பௌத்தத்தில் இதை நாங்கள் “ஞானநிலை” என்கிறோம். புத்தர் தன்னுடைய கைகளை அசைத்து நம்முடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் தீர்க்கும் மாயவித்தைக்காரர் அல்ல. மாறாக நம்முடைய வாழ்க்கைப் பிரச்னைகளில் இருந்து நம்மை நாமே விடுவித்துக்கொண்டு அதனை நாம் பின்பற்றுவதற்கான பாதையை அமைத்து கொடுத்திருக்கிறார். அதே போன்று நம் மனதின் நல்ல பண்புகளான – அன்பு, இரக்கம், பெருந்தன்மை, ஞானம் உள்ளிட்ட பலவற்றை மேம்படுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார். 

இந்தப் பண்புகளை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதற்கான போதனைகள் அனைவருக்கும் வெளிப்படையானது - கலாச்சார பின்னணி அல்லது மதத்தைப் பொருட்படுத்துவதில்லை. பௌத்தம் கடவுள் நம்பிக்கையை உட்படுத்துவதில்லை, ஆனால் நாம் பெறுபவை அனைத்தும் மதிப்பிற்குரியது தானா என்று போதனைகள் மூலம் நம்மை நாமே எளிய முறையில் ஆராயச் சொல்கிறது. இந்த வழியில் நாம் புத்தரின் போதனைகளின் நறுமணத்தை போற்றலாம் – நன்னெறிகள், இரக்கம் மற்றும் ஞானம் - இயற்கையாகவே நம்மை தீங்கில் இருந்து விலக்கிக் கொண்டு நேர்மறையானவற்றில் ஈடுபடுத்துகிறது, இதனால் நமக்கும் பிறருக்கும் பலன் கிடைக்கும். இதுவே நம்முடைய மற்றும் அனைவரின் ஆசையான மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை சமமாக அடைவதற்கான வழி நடத்தலாகும்.


Top